சிநேகம் என்னவென்றால் உண்மையான அன்புதான் சிநேகமாக பரிமளிக்கும். நமக்கு நம் சிநேகித, சிநேகிதியுடனே மனஸ்தாபம் வந்துவிட்டதென்றால் பெரிது படுத்தாமல் எப்படியாவது ஒட்டுப்போட்டுசரி செய்துகொண்டு அவர்களுடன் மறுபடியும் தொடர்பு வைத்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் வரட்டுமே என காத்திருக்க அவசியமில்லை. சிநேகம் என்பது சிலந்தி கூடு கட்டி தன்னுடைய இரையை வலைக்குள் மாட்டி வைத்து வேடிக்கை பார்ப்பது போன்றது அல்ல. சிநேகம் என்பது ஒரு அலாதியான உணர்வு. இந்த உண்மையான உணர்வு சந்திக்கும் யாவரிடமும் வந்து விடாது. அது சொந்தமாக இருந்தாலும் சரி , இல்லை பந்தமாக இருந்தாலும் சரி.
சிநேகிதர்களுக்காக நம் மனதில் ஒரு இடம் ஒதுக்கி அவர்களைப்பற்றிய நினைவுகளை பத்திரபடுத்தி நினைவுகூர்ந்தால் மனம் அவர்களை நமக்கு நினைவு படுத்தும். சில மனிதர்களுக்கு, அவர்கள் வாழ்வில் பார்க்காதவைகளை பார்த்துவிட்டால் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டால் அதன் விளைவு விபரீதமாகவே முடியும். இந்த சிநேகம்தான் தூரத்துபச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.
பணம் என்பது ஒரே இடத்தில் தங்காது . அது ஒரு ஊர் சுற்றி, நாடு சுற்றி, உலகம்சுற்றி. சிநேக பாவத்தில் எத்தனை குறையிருந்தாலும் தெரிந்த பேயைவிட தெரியாத தேவதையை உயர்வாக நினைக்கவே கூடாது. பணமிருப்பதற்காக சிநேகம் பாராட்டக்கூடாது யாருடனும்.
நம் சிநேகிதர்களை நாம் உள்மனம், வெளித்தோற்றம் புரிந்துகொண்டு விட்டோம் என்ற கர்வமும் கொள்ளவேண்டாம். ஏனெனில் மனித மனம் ஒரு ஆழ்கடல்,அளவுகோல் கிடையாது அதை அளக்க. சமயம் வரும்போதுதான் தெரியும், சிநேகத்தின் மகிமை. சிநேகிதர்களுடன் எந்த அளவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் இருதரப்பாரும் தெரிந்து கொண்டு சிநேகத்தை வளர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. அளவோடு அளவளாவி எங்கு நிறுத்தி விட வேண்டும் என்பதையும் புரிந்த கொண்டும் விட வேண்டும். நம்மை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் சிநேகம் கிடைத்து விட்டால் கேட்கவே வேண்டாம். உயிரைத்தந்து நம்மை காக்கும் சிநேகம் லட்சத்தில் ஒன்று, இரண்டுதான் இருக்கும். மேலும் சிநேகம் என்பதில் எதை செய்தாலும் ஆத்மார்த்தமாக செய்ய தோன்றவேண்டும். தான் செய்த உதவிகளைப்பற்றி நினைக்க தோன்றாது. இப்படி அவரவர் அனுபவத்தில் உணர்ந்து பார்த்தால்தான் புரியும்.
உண்மையான சிநேகம் என்பது நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்தாலும் நேற்றுதான் பேசியது போன்ற உணர்வு வந்தால்தான் உன்னதமான சிநேகம். வாழ்க்கையே ஒரு விளையாட்டு கலந்த வேடிக்கை!! நல்ல மனதுடன் சிநேகத்தை வளர்த்து, காப்பாற்றி வைத்து கொண்டு அனுபவிப்போம்.
Leave A Comment