அம்மா, உன்னைப்பார்த்த நினைவே எனக்கில்லையே,
அம்மா, உன்னைப்பற்றிகேட்கிறேன்,நினைக்கிறேன்,
அம்மா, நான் உன்னைப்பற்றி பார்த்ததேயில்லையே,
அம்மா, உன்னைபற்றி என்னால் பேசமுடியவில்லையே,
அம்மா, எனக்கு உன்னை தெரியாது,
அம்மா,நீ எப்படி, யார் மாதிரி இருந்திருப்பாய்,
அம்மா,உன்னைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன்,எனக்கே தெரியாது,
அம்மா, என்னை இவ்வுலகில்போட்டு விட்டுப்போன போது,என் அழுகுரல் கேட்கவே கூடாதென்று அமைதியை நாடி விட்டாயோ, அம்மா, எப்படியிருந்தாலும் அம்மா என்றழைத்தாலே ஆனந்தம்தான், ஆனால் எனக்கல்ல.