இப்போது கல்யாணங்களும்,விவாகரத்துக்களும் தாராசுவில் ஒரே அளவில்தான் இருப்பதாக தோன்றுகிறது. முன்பெல்லாம் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று வர்ணித்துப் பேசுவார்கள். இப்போது பெண்களும் சரி பிள்ளைகளும் சரி ஒத்துப்போகவே முடியாதபடி என்னதான் ஆகியிருக்கும் என நினைத்தே பார்க்கமுடியாதபடி
இருக்கிறது. குடும்பங்களில் சண்டைகள் எப்போதுமே வரும், சமாதானமும் ஆகியும்விடும். மனம்முறிந்து விட்டால் எதுவுமே சரியாக வராது.
எப்போதுமே பெண்களாலேயேதான் மணமுறிவுகள் ஆகியதாக கூற முடியாது. சில பெற்றோர்களும் காரணமாக இருக்கிறார்கள் எனவும் கேள்விப்படுகிறோம். பெண்களுடைய மனப்போக்குப்படி விட்டாலும் திருப்தியில்லாமலும் இருந்தும் வருகிறார்கள். ஆண்களும் எப்போதுமே ஓங்கிய கைகளை தொங்க விடாமல் இருப்பதும் சரி கிடையாது. ஈடுபட்ட உறவில் வேண்டியதை கொடுக்க முடியாமல் இருந்தாலும் ஒருவர் வாழ்க்கையை மற்றொருவர் நடத்திக்காட்ட முடியாது. நாம் எப்போது ஒருவரை கல்யாணம் செய்து கொள்கிறோமோ அந்தக்குடும்பத்தையே தன்னுடையதாகத்தான் பாவித்து எடுத்துக்கொள்ளவேண்டும், இரு சாராருமே அந்த குடும்பத்தின் கஷ்ட, நஷ்டங்களை தன்னுடையதாக பாவித்து செயல்பட வேண்டும். புது குடும்ப மனிதர்களுடன் நம்மையும் இணைத்துக்கொண்டு, வாழ்க்கையை நடத்த கற்றுக்கொள்ள வேண்டும். எந்த கஷ்டங்களையுமே தள்ளி நின்று பார்ப்பதற்கும் நாமே அந்த சிரமத்தில் இருப்பதற்கும் வித்யாசம் உண்டு. பழைய நாட்களில் அந்த நாட்களில் ஆண்கள் கண்டிப்பும், காய்தாவுடனும் பெண்மணிகளை ஓட்டுவார்கள். இப்போது அந்த ஆர்ப்பாட்டமெல்லாம் நடக்காது என்கின்ற சமயமும் இப்படிபட்ட தகராறு ஏன் நடக்கிறது என்றே புரிவதில்லை.