எனக்கு கல்யாணமோ கல்யாணம், கன்னி கழிய கல்யாணம் ,

கல்யாண பேச்சு எழுந்தபோது கனவு கண்டேன்,

கல்யாணமான ஆணுடன்தான் கல்யாணம் எனக்கேட்டதும் , துவண்டு போனேன்,

தூண்டிலில் மாட்டிக்கொண்ட மீனைப்போல தவித்தேன்,

இன்னொருத்தி பெற்றெடுத்த கன்றுகளை காப்பாற்றத்தான்  என் கல்யாணம் என்றதும்,

கதறினேன் மனதிற்குள், அதிர்ந்து எழுந்து அலறினேன் ,

அடிக்குமேல் அடி வாங்கி, அடி பணிந்தேன், மனம் ஒடுங்கியும்,

உடல்  நடுங்கியும் அடி பணிந்தேன். அடுத்த ஜென்மத்தை நம்பி காத்திருக்க  வேண்டாம்,

என முடிவெடுத்து  ஆயுளை முடிக்கட்டுமா, இல்லை, அடைக்கலம் ஆகட்டுமா, ஆண்டவனே ?