நம் வாழ்நாட்களில் எத்தனையோ வகையான மனிதர்களை சந்திக்கிறோம். ஒரு சிலரே மனதில் நிற்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சுபாவம், எண்ணங்கள் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். நிரம்ப படித்தவர்களுக்கும், படிப்பேயில்லாதவர்களுக்கும் சரி வெவ்வேறு விதமான தாகம் உள்ளது என்பது உண்மையே.
ஏட்டுசுரைக்காய் சமையலுக்கு உதவாது என்பது எத்தனை உண்மை என்பது, நடைமுறையில் காணும் போதுதான் புரிகிறது. படித்தவர்கள் படிப்பிலேயே சுழன்று , சுழன்று உலக இயல்புகளுக்கு ஏற்றாற்போல் நடக்க தெரியாது என்பது உண்மை என்றே புரிய வருகிறது. ஏதேனும் சிக்கலான சமயத்தில் அகப்பட்டுக்கொண்டு விட்டால் அவர்களுக்கு பீதி வந்துவிடுகிறது. திகைத்து நிற்கிறார்கள். நம்மைபோன்ற ஆட்கள் யாரிடம் உதவிகளை கேட்பது என்று யோசிப்பதில் சமயம் வீணாகி விடுகிறது.
அதேசமயம் பணமோ, அதிகபடிப்போ, பதவியோ இல்லாதவர்கள் சிக்கல்களை தவிர்க்கப்பார்க்கிறார்கள். யார் கால்களையாவது பிடித்தோ, உதவிகளை கேட்டும், தங்கள் சிக்கல்களை தவிர்க்க பார்த்து அதில் வெற்றியும் அடைந்து விடுகிறார்கள். பணபலத்தைவிட மனோபலம் முக்கியம்.
இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் எந்தபலத்தையும் விட உண்மையான பலம் நம் மனோபலம்தான், என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மனது திடமாக இருந்து விட்டால் எந்த கெட்ட நேரத்தையும் நாம் எல்லோருமே சமாளித்து விட முடியும். நமக்கு உதவியாக இருந்தவர்களை நாம் எக்காலத்திலும் மறக்கவும் கூடாது.
Leave A Comment