துக்கத்தை பார்த்தவர்களுக்கு தூக்கமிராது , வாழ்நாளில்,

துக்கத்தில் மூழ்கியவர்களுக்கு துக்கமே மூழ்காதே, உடலில்  உயிர் ஓடும் வரை,

துக்கத்தில் குறைந்த துக்கம் எது ? தூக்கலான துக்கமெது ?

துக்கமென்பது துரத்தி, துரத்தி  தணிந்தே எரியும் , எரியும், பற்றி எரியாது,

கொழுந்து விடாது, கொளுத்தும் துக்கம் , துணி போல் துவளுமே,

துக்கமடைந்தோர் கண்களில் சோகம் தவழும் , தனிமையில் கண்ணீர் தளும்பும்,

துக்கமென்பது தன் துர் சக்தியை விடாது,  துக்கப்பட்டவர்களை துன்புறுத்துமே,

தவிக்கும் துக்கத்தில் உள்ளவர்களை தட்டியெழுப்ப பார்க்காதே,

அன்பு வெள்ளம் என்பதுடன் , துக்க சாகரத்தை இணைத்துப்பார்,

வெள்ளமென்பது அடித்துக்கொண்டு போய்விடும், சாகரம் என்பதோ இருக்கும்,

இடத்திலேயே அலை, அலையாக மோதி , திரும்ப, திரும்ப வந்து பாயும்.

அளவு , ஆழம் தெரிகிறதா என்று கவனமாக பார் ,

துக்கப்பட்ட மனதை பிடுங்க பார்க்காதே, நைந்து கிடக்கும் மனதை ,

ஆண்டவனை தவிர யாராலும் உயிரெழுப்பி காணமுடியாது.

காலன் வந்து பிடுங்கிப்போனதை காலம்தான் மறக்கவைக்கும்,

காலம்தான் மறக்கவைக்கும் காணாமல்போனதை!!

காலம்தான் காவலனாக இருந்தும் காக்க வேண்டும்!!