சின்ன வயதில் பட்டாம்பூச்சி போல் பறந்துலாவ ஏங்கினேன்,
சின்ன வயதில் பட்டினம் பார்க்க ஏங்கினேன்
சின்ன வயதில் பட்டுப்பாவாடைக்கும் ஏங்கினேன்,
சின்னவயதில் பட்டாஸ் வெடிக்கவும் ஏங்கினேன்,
சின்னவயதில் படிப்பவர்களை பார்த்து, பார்த்து ஏங்கினேன்,
சின்ன வயதில் நானும் படித்து பட்டம் பெற ஏங்கினேன்,
சின்னவயதில் பத்திரிகைகளில் எழுத ஏங்கினேன்,
சின்னவயதில் பணம் சம்பாதிக்கவும் ஏங்கினேன்,
சின்னவயதில் பார்லிமெண்ட்டுக்குள் போக ஏங்கினேன்,
சின்னவயது ஏக்கங்களை , கொஞ்சம், கொஞ்சமாக,
நிறைவேற்றிக்கொண்டு முதிய வயதில் உட்கார்ந்து கொண்டும்,
புத்திர, புத்திரி, பௌத்தர சந்தானங்களுடன் பொம்மைபோல நின்று கொண்டும்,
வாழ்வின் கடைசி கட்டத்தில் காலனை வரவேற்க ஏங்கி நிற்கிறேன்.
Leave A Comment