காலம் ஓடுகிறது, பழக்க, வழக்கங்கள் மாறுகின்றன. மனித மனமோ, ஆனால் பெற்றோர்களின் மனம் மாறுவதற்கு பதிலாக தவிக்கிறது. தன்னுடைய பிள்ளையோ இல்லை பெண்ணோ, சொத்தையாகி வீணாகிப்போய் , கூட்டத்தின் ஓரத்தில் நின்றுவிட்டால் என்ன செய்வது எனநினைத்து தவித்துப்போய் பரிதவிக்கிறார்கள்.
அவர்களை எப்பாடு பட்டாவது தூக்கி நிறுத்த பார்த்து தோல்வியடைந்து மனம் உடைந்து நிற்கிறார்கள். புத்திர சந்தானங்களோ தன் தோல்விக்கு யாரை குற்றம் கூறி நழுவலாம் என சமயத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். படிப்பு என்னும் விஷயத்தில் அவரவர்கள்தான் படித்து முன்னேறப்பார்க்க வேண்டும். யாரும் எவரையும் தூக்கி நிறுத்த முடியாது.
வெற்றியடைந்தவர்களை விட தோல்வியை தழுவியவர்கள் தைர்யசாலிகளாகவே இருப்பார்கள். எப்போதுமே தோல்வி அடைந்தவர்கள், தன் தவறுகளை மறைக்க வடிகால் தேடி அதில் வெற்றியும் அடைவார்கள். ஏனென்றால் புத்திசாலிகளுக்கு ஒரே நோக்கம் படிப்புதான். அரை வேக்காடுகளுக்கு ஆயிரம் ஐடியாக்கள் உதயமாகும். உழைக்க பயப்படுவதால் கால்களை ஊன்றி நிற்பது கஷ்டம்தான் . ஆனாலும் தோல்வியை வெளியில் காண்பித்து கொள்ளாமலும், சகஜமாகவும் பழகுவார்கள்.
இந்தக்காலத்தில் பிள்ளைகளின் தோல்வியை பெற்றவர்கள் தங்களுடையதாக ஏற்றுக்கொள்வதுதான் காரணம். அந்தக்காலங்களிலும் எத்தனையோ மனிதர்கள் IAS, IPS, படித்திருந்தவர்களையும் பார்த்திருக்கிறோம். அந்தகாலத்தில் டாக்டர், வக்கீல் எனபடித்து சொந்த தொழிலும் செய்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த படிப்பு படித்துதான் ஆகவேண்டுமென யார் சொல்லியிருப்பார்கள், அவர்களுக்கு?
பிள்ளைகளை துரத்தி, துரத்திக்கொண்டே போகும்போது, ஒரு லிமிட் வந்தவுடன் அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை முறைத்துப்பார்த்த பிறகுதான் ஆடாமல் அசையாமல் நின்று விடுகிறார்கள். பிள்ளைப்பாசமாகப்பட்டது அப்படியும், இப்படியுமாக தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறது, பெற்றவர்களை.
பிள்ளைப்பாசம் என்பது பெற்றோரை பரிதவிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறது. இதிலிருந்து தப்பியவர்கள் வெகு சிலரே. பலரும் இந்த பாசவலையில் சிக்கிக்கொண்டு திணறுகிறார்கள். இப்போதைய நாகரீகம் என்னவென்றால், பிள்ளைகளிடம் படிப்பை பற்றியே பேசக்கூடாதாம், பிள்ளைகளுக்கு டென்ஷன் அதிகமாகி விடுமோ, என பெற்றோர் கவலைப்படுகிறார்கள்..
Leave A Comment