உனக்கென்று வாழ வேண்டுமானால், நீயேதான் முடிவுகளை எடுக்க வேண்டும். உன்முடிவுகளுக்கு நீயேதான் காரணமாக இருக்கவேண்டும். உன் வெற்றி ,தோல்விகளை நீயேதான் எதிர்கொள்ள வேண்டும். உன் வெற்றியில் யாருக்காவது பங்கு உண்டுஎன்றால் நன்றியுடன் இரு. தோல்வி என்பதை அடைந்தால் நாம் ஏமாந்து விட்டோம் என நினைத்து உன்னை சுதாரித்துக்கொள். நம் வாழ்க்கையின் வெற்றி, தோல்விக்கு நான்தான் காரணம் என நினைக்கும்போது நம்மை நாமே திருத்திக்கொள்ள வழி தேடுவோம் .
நம் வாழ்க்கையின் வெற்றிக்கும் தோல்விக்கு பிறரையே குற்றம் , குறைகள் கூறும்போது, நாம் நம்மில் , நம்மை குறைத்து கணக்கு போடமுயன்று , மேலும் தோல்விகளையே அடைவோம். வெற்றியோ, தோல்வியோ என்னாலேயே நான் அடைந்தேன் என நினைக்கும் போது அடுத்தமுறை பழைய முயற்சிகளை விட பல மடங்கு யோசித்து மனோ சக்திகளை நமக்குள் பெருக்கி கொள்ளபார்ப்போம்.
பிறரை குற்றம் சொல்லும் போது நாம் நம்மையும் இழந்து, யார் நமக்கு உதவி செய்தார்களோ அவர்களையும் இழந்து விடுவோம். நமக்கே ஆத்ம பலம் இல்லையென்றால் யாராலுமே நம்மை உயர்த்த முடியாது. ஆகையால் தன் பலத்தையே பலமாக நம்புங்கள் . நன்றியை மட்டும் மறந்து விடாதீர்கள்.
Leave A Comment