மனிதனுக்கு வயிற்றுப்பசி என்று தவிக்கவேண்டி வருவது மிகவும் கொடுமையான ஒரு சாபம். பசித்தவனுக்கே ருசி தெரியும். பசிக்காமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தோமானால் ருசியுள்ள சாப்பாட்டின் அருமையே தெரியாது. உண்மையாகவே சாப்பாட்டின் அருமையே தெரியாது. தின்பதற்கு நிறைய கிடைக்க, கிடைக்க எது கிடைக்கவில்லையோ அதையே தேடி வாங்கலாம் என்றே நினைக்கத்தோன்றுகிறது.
சில சமயங்களில் வாய்க்கு வேண்டுவதையெல்லாம் சாப்பிட நினைத்தால் வேண்டாதவைகளையே தேடிப்பிடித்து வாங்கி சாப்பிடத்தோன்றுகிறது. அதனால் நல்ல சாப்பாட்டுக்கும் , வயிற்றுக்கு ஒத்துவராத சாப்பாட்டின் மகிமைக்கும் வித்யாசம் தெரியாமல் திண்டாடுகிறோம்.
நமக்கு நாம்தான் எதிரிகள், நாம்தான் சிநேகிதர்களும் கூட. பணக்காரனாக இருப்பவர்கள், கண்டவைகளை தின்றுவிட்டு திண்டாடுவார்கள். ஏழைகள் சாப்பாடு இல்லாது திண்டாடுகிறார்கள். வாயை கண்ட்ரோலில் வைத்துக்கொள்பவர்களே புத்திசாலிகள். சாப்பாடு என்பதை அவசியத்திற்காக உபயோகிக்கிறவர்கள், உடல் நலனுடன் இருந்து வருவார்கள். நமக்கு கிடைக்கிறது என்பதற்காக உண்பவர்கள் வியாதிகளை வாங்கி கொள்கிறார்கள்.
அந்த நாட்களில் ஏகாதசி , அமாவாசை, மற்றும் திதி நாட்களில் ஒரே வேளை சாப்பிட்டு , இரவில் பால்,பழம் எடுத்துக்கொண்டு தூங்குவார்கள். இப்போதைய மனிதர்கள் எதையுமே எப்போது வேண்டுமானாலும் சாப்பிடும் பழக்கத்தை அனுசரிப்பதால் யாருக்கும் பசியை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
Leave A Comment