அண்ணா என்றாலே அண்ணாதான். தலைவர் அண்ணா, அறிஞர்அண்ணா, கதாகாலட்சேப அண்ணா போன்றவர்கள் தான் நினைவுக்கு வரும் நம் எல்லோருக்கும். குடும்பங்களிலமும் அண்ணாக்கள் இருப்பார்கள்.
ஆனால் மனிதர்கள் பலவிதம் மாதிரி அண்ணாக்களும் பலவிதம் உண்டு. ஆனால் நம்மில் சிலருக்கு அண்ணாவுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வந்தவளிடம் அசிருசி வந்து விடுகிது. இந்தமனப்பான்மை காலப்போக்கில் உயிருக்கு உயிரான அண்ணனிடமும் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. அதே அண்ணாதான், புதிய பிறப்பு எடுக்கவில்லை. காலம் மாறலாம், உண்மையான பாசம் மாறுமா ? எத்தனை குடும்பங்களில் இந்த மாதிரி அவலநிலையை காண்கிறோம் . சகோதரசகோதரிகளே யோசித்துப்பாருங்கள். நமக்குள் வரும் சுகதுக்கங்களுக்கு அண்ணாவின் மனைவிதான் காரணம் என்று முடிவு கட்டுவது எத்தனை பேதமை?
எண்ணிப்பாருங்கள். நாம் யாரை உயிருக்குயிரானவனாக நினைத்தோமோ அவனை யாரிடம் பலிகொடுத்துவிட்டோம். சகோதர,சகோதரிகளே, தன்உயிராக நினத்தவனை விட்டு விட்டோமே ! சகோதரனிடம் அத்தனை பாசமோ கரிசனமோ உண்மையிலேயே இருந்திருந்தால் அண்ணியிடமே பலி கொடுக்கலாமா ? அண்ணனிடம் வந்த கோபத்தில் அண்ணனை பழி வாங்கும் நோக்கத்தில் அண்ணியை பலசாலியாக்கி விட்டடோம். இதில் தோற்றவர்கள் சகோதர சகோதரிகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. பெண்புலியை விட ஆண் புலி பலகீனமாது தான் என்பது தெரிந்தும் நாம் நம் சக உதிரத்தின் காலை வாரிவிட்டு குடும்பத்தில் வந்து சேர்ந்து கொண்ட , யாரோ ஒருவருக்காக உன் பந்தத்தை துண்டித்து கொள்வது நியாயமா ? ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான்.
சகோதர சகோதரிகளே, யோசித்து பாருங்கள்.
Excellent writings…….