அம்மா என்பவளுக்கு தன் குழந்தைகளை வளர்க்க படாதபாடுபடுவாள்.அவர்களுக்காக என்னவேண்டுமானாலும் பண்ணுவதற்கு தயாராகி விடுகிறாள்.ஆனால்சிங்ககுட்டிகள் நம்பலவீனத்தை தங்களுடைய பலமாகவும் உபயோகித்துக்கொண்டு விடுகிறார்கள். நாம் முழித்துகொள்வதற்குள் ஏமாந்து போக தயாராகிவிடவேண்டும். இது எப்படி என்றால் ஊர் பேர் தெரியாமல் நம் உறவினர்களை தேடுவதற்கு சமானமாகி விடுகிறது.

தெரியாத ஊருக்குபோகும் போது சரியான ரயலிலோ ஊர்தியிலோ போகாவிட்டால் போய்சேர்ந்தால்தான் நிச்சயம்.அதேபோல்தான் பிள்ளைகள் வளர்ப்பும்.நம் சிங்க்குட்டிகளுக்கு நம் தியாகமனப்பான்மை புரிந்துகொள்வதற்குள் நம் உள்ளம் உறைந்து போய்விடுகிறது.நான்தான் எதையுமே அனுபவித்த்தேயில்லையே  என்கிற பச்சாதாபத்தினால் வந்த கேடு இது.ஆனால் நிறைய பிள்ளைகளும் பெற்றோர்களை கவனித்துகொள்பவர்களும்இரந்துவருகிறர்கள்.