நானும் உங்களைபோலவே விசிட்டர் விசாவில் வந்து ,வந்து திரும்பும் ஒரு அம்மா. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்பட்டுள்ளது எனக்கும்.
நானும் இந்த பரந்த தேசத்தின் பச்சைநிறமல்லாது மற்ற வர்ண செடிகள், மரங்களில் ஆழ்ந்து போய் அதிசயப்பட்டு போனேன் என்பதில் சந்தேகமேயில்லை.பூக்களின் எண்ணிக்கைக்கும் அளவேயில்லையென்பதில் ஆழ்ந்துபோய் தான் திரும்பி போயிருக்கிறேன். இந்த ஊரின் தூசி கூட டால்கம்பவுடர் மாதிரி இருக்கே என்று நினைத்திருக்கிறேன். எதைப்பார்த்தாலும் கண்களை அகல விரித்துப்பார்ப்பேன்.
இந்ததேசத்தில் ஆனந்தமும் இருக்கிறது, பணம் கொள்ளையாக இருக்கு, கடுமையான துக்கங்களும் உள்ளன. வாகனங்கள்அளவேயில்லை, விபத்துக்கள் குறைவாகவும்உள்ளது, வியாதிகள் உள்ளன ஆனால் எமன் பயந்துகொண்டு தான் மெதுவாகத்தான் வரமுடியும் ஏனென்றால் வைத்தியம் உச்ச்கட்டத்தில்உள்ளது.
ஆண்கள் பெண்கள்வித்யாசமேயில்லாமல் பழகுகிறார்கள். மனதுக்கு எல்லாமே ரம்யமாக தெரிந்தாலும், நமக்கென்றுஎதுவுமில்லை இங்கே. நம்மால் எங்கேயுமே தனியாக போக வர முடியாது, நாம் யாருடன் தங்கிக்கொண்டிருக்கிறோமோ அவர்களில்லாமல் நம் அணு அசையாது என்பது உண்மையிலும் உண்மை.
அவர்கள் சிரிக்கும் போது நீங்களும் சிரித்து பழகவேண்டும், சிரிப்பு வராவிட்டாலும் இனிமையாக சிரிக்க வேண்டிய கட்டாய நிலை உண்டாகிவிடுகிறது.
இது போகட்டும்! நம் பிள்ளைகள்தானே, பரவாயில்லை. நம்மை போன்ற நடு வயதை தாண்டியவர்கள், அதிகாரத்தில் ஊரியவர்கள், பொம்மலாட்ட பொம்மைகளாக இருக்கமுடியுமா என்பதுதான் என் கேள்வி.
What an experience in US? This explains the status of all -old age parents visiting their children in US.