பலாத்காரம் என்பதை பற்றி பேசிப்பேசி எதுவுமே பிரயோசனமே இல்லாமல் இருக்கின்றது . வெறும் வாய்ப்பேச்சினால் எதுவும் ஆகாது.  அடுத்த பலாத்கார கேஸ்  வரும் வரை இதை பற்றி பேசுவார்கள். வெட்டிப்பேச்சினால் எதையும் சாதிக்க முடியாது. தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்தால்,  தன்னால் தப்பிக்கமுடியாது என்கிற பயம் இருந்தே ஆகணும்.

இயற்கையை மீறிய சில வேலைகளை மனிதன் செய்கிறான் என்றால் ,அவனை சமூகம் மன்னிக்காது  மன்னிக்கவும் கூடாது.  மனிதன் சுய மரியாதையை இழந்து விட்டான்.  ஆண் வர்க்கத்திற்கே அவமானம்இது.  அவன் செய்யக்கூடாதவையை செய்தும் விட்டு உலாவிக் கொண்டிருக்கும்   ஆட்களை மன்னிக்க முடியாது .

துர்செயலுக்கு தகுந்த தண்டனை கிடைத்தால் மனிதன் பயப்படுவான்.செயலுக்குத் தகுந்த தண்டனை  மிகவும் அவசியம். நம் தேசத்தைப்பற்றி – பாரத்மாதா என்று  கேட்கும்போது உடம்பு முழுவதும் தகிக்கிறது.மாதாவிற்கு என்ன மரியாதை காட்டுவார்கள்- இந்தமாதிரியான ஆண்கள்?

தப்பு செய்துவிட்டால் அத்தோடு தொலைந்தோம் என்ற பயத்தை கொடுக்க ஆயுள் தண்டனை  போன்ற  கடுமையான தண்டனையை  கொடுத்தாலாவது நம் மனித மிருகங்களை திருத்த முடியுமா என்று பார்க்கலாம். செயலுக்குத்தக்க தண்டனை அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன் .  தவறு செய்துவிட்டால்  என்னால் பிழைக்க முடியாது என்கிற உணர்வை தவறு செய்கிறவர்கள் மனதில் ஆழமாக உணர்த்த வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.