சொறியே, சொறியே நீ ஏன் மறைந்தாயோ, உன்னைப்பிரிந்து என் மருமகள் படும் பாட்டை எப்படி

சொல்வேன் , உன்னைப்போலவே, ஒரு சொறியை எங்கே தேடுவேன் !

நீ  ஏன் வந்தாயோ, ஏன் போனாயோ, தெரியாது தவிக்கிறாளே!

நீ உலவி வராத வீடும் , வீடாகத்தோன்றவில்லையே அவளுக்கு!

நீ இல்லாத  வீடு மௌனமாகி விட்டதே  எனக்கூறி தவிக்கிறாளே ,

உன் நடையே ராஜ நடைதான், உன் பார்வையும் ராஜ பார்வைதான்!

நீ குரைத்து பயமுறுத்தாமல்  முறைத்தே  பயமுறுத்துவாயே ,

உன் நினைவு அவளை வதைக்கிறதே!

உன் முன் காலமும் தெரியாமல், பின் காலமும் தெரியாது, நடுக்காலத்தில் ,

அவளிடம் வந்து  மாண்டு போனாயே!   சொறியின் குரலை ரசித்த அவளுக்கு,

நாய் குரைப்பே நாராசமாக உள்ளதே அவளுக்கு !

நீ சொர்க்கம் போனாயா இல்லை நரகத்தில் உழல்கிறாயா , என தவிக்கிறாளே !

அவளுடைய இந்த நிலை மாற நீ மறுபடி வருவாயா  சொறியே, சொறியே, சொறியே !!!