சொறியே, சொறியே நீ ஏன் மறைந்தாயோ, உன்னைப்பிரிந்து என் மருமகள் படும் பாட்டை எப்படி
சொல்வேன் , உன்னைப்போலவே, ஒரு சொறியை எங்கே தேடுவேன் !
நீ ஏன் வந்தாயோ, ஏன் போனாயோ, தெரியாது தவிக்கிறாளே!
நீ உலவி வராத வீடும் , வீடாகத்தோன்றவில்லையே அவளுக்கு!
நீ இல்லாத வீடு மௌனமாகி விட்டதே எனக்கூறி தவிக்கிறாளே ,
உன் நடையே ராஜ நடைதான், உன் பார்வையும் ராஜ பார்வைதான்!
நீ குரைத்து பயமுறுத்தாமல் முறைத்தே பயமுறுத்துவாயே ,
உன் நினைவு அவளை வதைக்கிறதே!
உன் முன் காலமும் தெரியாமல், பின் காலமும் தெரியாது, நடுக்காலத்தில் ,
அவளிடம் வந்து மாண்டு போனாயே! சொறியின் குரலை ரசித்த அவளுக்கு,
நாய் குரைப்பே நாராசமாக உள்ளதே அவளுக்கு !
நீ சொர்க்கம் போனாயா இல்லை நரகத்தில் உழல்கிறாயா , என தவிக்கிறாளே !
அவளுடைய இந்த நிலை மாற நீ மறுபடி வருவாயா சொறியே, சொறியே, சொறியே !!!
so true…well said Athai
காயத்ரி மனமார்ந்த நன்றிகள் உன்னுடைய காமென்டிற்கு, அத்தை
Nicely written poem with good imagination.
மனமார்ந்த நன்றிகள் மீனா!! ஒரே மூச்சில் என் பக்கங்களை படித்து பார்த்து comments போட்டு விட்டீர்கள்!!