(எழுதியவர் வெ. நாராயணசுவாமி alias துரை)

ஊர் முகப்பில் வரவேற்க, உலகளந்த  பெருமாளும், ஊர்க்கோடி தேவர் குளக்கரையில்
ஊர் காக்கும்  அபிராமி.

பவழமல்லி மணம் கமழும்,  பாரிஜாத தோட்டத்தில் ,  பஞ்சாயத்தார் தவம் செய்த
வேதவித்தகர் சுப்ரமண்ய சாஸ்திரிகள், சித்தி அடைந்த சமாதியும், வேதாந்த  சாகரத்தில்,

மூழ்கி திளைத்த வேம்பு ஐயர், வாழ்ந்த ஊர்  சித்தமல்லி என்ற சிறு கிராமத்தின்,
மலர்ந்த நினைவுகளை,  உலராமல் இருக்க,  நினைத்துப் பார்த்து மகிழ்வடைகிறேன் !

செல்லமான அவர் பெயர்,   புதுவீட்டு  சின்னையா,  சித்தமெல்லாம்,   ஶ்ரீராமர்  வசம்வைத்து,
சிறுபிராயம் முதல்,  விவசாய வாழ்வை விருப்பமுடன் மேற்கொண்டார்,
வயலுக்கு நீர்பாய்ச்சி,  ஏர் பிடித்து உழுதிடுவார்,  நாத்தியிட்டு  பயிரிடுவார்,  வயல் இறங்கி  ,
களை எடுப்பார். களைப்பாற கரை ஏறி,   வெற்றிலை பாக்குடனே புத்துணர்ச்சி  அடைந்திடுவார்!

ஏழை, எளியவர்கள்,  அவர்நெஞ்சில் குடியிருப்பார்,  ஊருக்கு உதவி செய்ய உறுதியுடன்  முன்வருவார்.
ஊர்மக்கள் விவகாரம்,  பொறுமையுடன் செவி சாய்த்து,  தீர்க்கமான தீர்ப்பளிப்பார்!

விஷம் தீண்டிஓடிவந்தால்,  முழு நீள மந்திரநூல் கட்டி, விஷமிறக்கி உயிர் காப்பார்!

திருமணம்  பல  முடிவு செய்வார்,  முன்னின்று நடத்தி வைப்பார். பிணி என்று வந்தவருக்கு
கண் விழித்து பணி செய்வார்,  களவாடி சென்றவனை,  கணப்பொழுதில் பிடித்திடுவார், பிள்ளைகள்
முத்தாக மூவரும்,  அஷ்டலக்ஷ்மியாக பெண்களும் ,  அவர்பெற்ற செல்வங்கள்!

நாகபூஷணமய்யரவர் ஶ்ரீராமஜெயம்  ஒன்றே,  தாரக மந்திரமாக ஜபித்து,  ஏறு நடையுடன்,

செல்வ சிறப்புடன்,  செல்லமுடன் நாகப்பா நகரில்வாழ்ந்து நாகப்பாநகரிலேயே ஐக்கியமானார்கள்!