மனமே, மனமே நீ இருக்குமிடம் தெரிந்தால் , உன்னை தேடி வருவேன் ,

மனமே, மனமே நீ இருந்தால்தான் மார்க்கம் உண்டு என்பது உண்மையா?

மனமே , மனமே நீ இருந்தால்தான் வாழ்வு உண்டு என்கிறார்களே, உண்மையா?

மனமே ,மனமே, நீ இருந்தால்தான்  அன்பு என்பது இருக்குமா, உண்மையா?

மனமே,மனமே,நீ  இருந்தால்தான் மகிழ்ச்சியும் இருக்குமா, உண்மையா?

மனமே, மனமே, நீ இருந்தால்தான் மதியும் மலருமா, உண்மையா ?

மனமே, மனமே,  நீ இருந்தால்தான் மலையை அசைக்க முடியுமா, உண்மையா?

மனமே, மனமே, நீ இருக்குமிடம் தெரியாது ,  நான் உன்னை எப்படி, எங்கே தேடுவேன் ?

என் உடலில் எந்த அங்கம் எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியும்.  நீ இருக்குமிடம்தான்

தெரியவில்லை!!

யாருக்காவது தெரியுமா?