விவாகம் என்பதில் ஈடுபட்டால் விவாகத்தை முறிக்க பார்க்கக்கூடாது. இப்போதெல்லாம் அவரவர் தானாகவே பார்த்து விவாகம் செய்து கொண்டாலும் கல்யாணம் உடையாது என்பதற்கும் கியாரண்டி இல்லாமலும் போய்விட்டது. மனித மனம் அலை பாய்கிறதுதான் காரணமாக உள்ளது. தன்னை மீறி ஒரு கோபம், தாபமெல்லாம் ஏன் வருகிறது? பிள்ளைகள் நினைத்துப்பார்க்காமலா இருக்கிறார்கள்? யாரும், யாருக்கும் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் முடிவு எடுத்துக்கொண்டேன். நானே தீர்ப்பளித்து கொண்டுவிட்டேன் என்கிறமாதிரி இருக்கிறது, சில கேஸ்களில். நாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியது என்பதுதான் தீர்ப்பு. வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது மட்டும் நம் கொள்கை கிடையாது.

நம் கதை யாருக்குத்தெரியும் என்று நாம் நினைத்தாலும், மற்றவர்களும் வெகு கவனமாக நம்மையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதை பிள்ளகளும் உணரவேண்டியது மிகவும் அவசியம். பழைய காலத்தில் கல்யாணம் செய்வதானால் மிகவும் கடினமான வேலையாகத்தான் இருந்தது. சமையல்காரன், மேளதாளங்களுக்கு பால், மோர் என்று எல்லாவற்றிற்கும் நாம்தான் தனித்தனியாகவே ஏற்பாடுகள் செய்து கொள்ளவேண்டும்.

இப்போது அப்படியெல்லாம் திண்டாட வேண்டிய அவசியமில்லை. கல்யாண ஹால் புக் ஆகிவிட்டால் எல்லாமே தயாராகி விட்டாற்போல் நினைத்துக்கொண்டு விடலாம். ஹால் கிடைப்பதுதான் கடினம்,கல்யாண சீசன் சமயம். எத்தனையோ கல்யாணமுறிவுகளை பெற்றோர்கள் பார்த்திருந்தாலும், கேட்டிருந்தாலும், தனக்கென்று வரும்போது கிடைக்கும் அனுபவம் தாங்கமுடிவதில்லை.

பெற்றோர்களுக்கு எத்தனை தலைகுனிவு வருகிறது என்று பிள்ளைகள் யோசித்துப்பார்க்க வேண்டியது பிள்ளைகளின் கடமையும் கூட.  அவர்கள் பெற்ற பிள்ளைகள் எத்தனை இருந்தாலும், எல்லோரும் நன்றாக இருந்தால்தான் பெற்றோருக்கும் நிம்மதி.  பெற்றோர் உங்களை சப்போர்ட் பண்ணுவது போல் இருந்தாலும்கூட தன்பிள்ளையை எப்படிவிட்டுக்கொடுத்து வேடிக்கை பார்ப்பது என்று கூட நினைக்கலாம்.
எத்தனை வசதிகள் இருந்தபோதிலும் கணவன், மனைவி என்ற உறவின் மகிமையே தனித்தன்மை வாய்ந்தது என்பதில் சந்தேகமேயில்லை. பெண்களுக்கு உயர்வானவேலை, நிறைய சம்பாத்தியம் உள்ளபோதிலும் ஒரு குடும்பமில்லாத பெண்மணியை சமூகம் எப்படியும் ஒருமாதிரியாகத்தான் பார்க்கிறது என்பது உண்மையே.

பணம் பிடுங்கும் பேர்வழிகளாக இருந்தால் மட்டுமே எதற்கும் அசையாத கட்டைகளாக   இருப்பார்களாகளோ என்னவோ என குடும்பத்தையும் கேவலமாகவே நினைக்கத்தோன்றுகிறது.